தற்போதைய பல சிக்கல்களை எதிர்கொள்ள புத்தரின் போதனைகள் அவசியம்: பிரதமர் மோடி

டெல்லி: தற்போதைய பல சிக்கல்களை எதிர்கொள்ள புத்தரின் போதனைகள் உதவுகிறது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

இந்தோ- ஜப்பான் சம்வாத் மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி காட்சியின் வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவர் உரையாற்றியதாவது: அரசுகள் தங்கள் கொள்கைகளில் மனிதநேயத்தை கடைபிடிக்க வேண்டும். ஒருவரை கீழே தள்ளி விட்டு முன்னேறி செல்லாமல், அனைவரும் ஒன்றிணைந்து வளர வேண்டும்.

புத்த இலக்கியங்கள், வேதங்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்ள நூலகம் அமைக்க வேண்டும். அதற்கு இந்தியா உதவ தயாராக இருக்கிறது. புத்த மதத்தின் சிறந்த இலக்கியங்கள், பல்வேறு உலக நாடுகளில் உள்ள மடங்களில் காணப்படுகிறது.

தற்போதைய உலகில் பல சிக்கல்களை எதிர்கொள்ள புத்தரின் போதனைகள் உதவுகிறது. அனைத்து நூல்களையும் டிஜிட்டலில் மாற்றி, அனைவருக்கும் கொடுக்க வேண்டும், புத்த துறவிகளுக்காக அவரவர் மொழிகளில் இந்த நூல்கள் மொழி பெயர்க்க வேண்டும் என்று பேசினார்.