முட்டைக்கோசுக்குள் பாம்பு : சாப்பிட்ட தாய், மகள் மருத்தவமனையில் அனுமதி

ந்தூர்

முட்டைக்கோசுக்குள் பாம்புக்குட்டி இருப்பதை அறியாமல் அதை நறுக்கி, சமைத்து சாப்பிட்ட தாயும், மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தூரை சேர்ந்தவர் 35 வயதான அஃப்ஸான் இமாம்.  இவர் தனது மகளான ஆம்னா (வயது 15) உடன் வசித்து வருகிறார்.  நேற்று இரவு இவர்கள் ஒரு முட்டைக் கோஸ் வாங்கி வந்து நறுக்கி உள்ளனர். அதில் ஒரு குட்டிப் பாம்பு இருந்ததை கவனிக்காமல் பாம்பையும் சேர்ந்து நறுக்கி உணவாக உட் கொண்டனர்.

இருவருக்கும் திடீரென வயிற்றை புரட்டி வாந்தி வந்தது.  உடனே சந்தேகப்பட்டு மிச்சமிருந்த சமைத்த கோஸை எடுத்துப் பார்த்ததில் அதில் பாம்புக் குட்டியின் துண்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.  உடனே இருவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.  அங்கு இவர்களை அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது.

மருத்துவ மனையின் டாக்டர் தர்மேந்திரா ஜான்வார் கூறுகையில், “தாய், மகள் இருவருமே இங்கு வருவதற்கு முன்பிருந்தே பல முறை வாந்தி எடுத்த்துள்ளனர்.  அவர்கள் இப்போது சாதாரணமாக உள்ளனர்.  இருந்த போதிலும், ஒருவேளை பாம்பு விஷம் இரத்தத்தில் கலந்து இருந்தால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதால் எல்லா பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

இது அந்த தாய், மகளுக்கு மட்டும் அல்ல, நம் எல்லோருக்குமே ஒரு பாடம் ஆகும்.  எந்த ஒரு காயையும் நறுக்கும் முன் நன்கு பரிசோதித்து விட்டு நறுக்கி சமைக்க வேண்டும் என்பதை மறக்கக் கூடாது.