டில்லி

ன்று கொரோனா பாதிப்பால் பஞ்சாபில் ஒருவர் மரணம் அடைந்ததை அடுத்து இந்தியாவில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

உலக மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி வரும்  கொரோனா வைரஸுக்கு இதுவரை 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி ஆகி உள்ளனர்.  சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.    இந்த வைரஸ் தாக்குதல்  இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.  கடும் கட்டுப்பாட்டால் நாடெங்கும் வரும் 31 வரை இயல்பு வாழ்க்கை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “:இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்  இவர்களில் 25 பேர் வெளிநாட்டினர் ஆவார்கள்.  இதில் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் 17 பேர், பிலிப்பன்ஸ் நாட்டினர் 3 பேர்,  இங்கிலாந்து நாட்டினர் இருவர், கனடா, இந்தோனேசியா, சிங்கப்பூரில் இருந்து தலா ஒருவர் பாதிப்புடன் இந்தியா வந்துள்ளனர்.

இன்று பஞ்சாபில் கொரோனாவால் மரணக்டைந்தவருடன் சேர்ந்து மொத்தம் நான்கு பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இவர்களில் டில்லி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவர் மரணம் அடைந்துள்ளனர்   பாதிப்படைந்தோரில் 20 பேர் குணம் அடைந்துள்ளனர்.  டில்லியில் மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.