ஈராக்: தற்கொலைப் படை தாக்குதலில் 2 போலீசார் பலி

பாக்தாத்:

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் அடிக்கடி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி வருகின்றனர். சோதனைச் சாவடி ஒன்றில் நடந்த கார் தற்கொலைப் படை தாக்குதலில் நேற்று 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதேபோல் இன்று கிர்குக் நகர் சோதனைச் சாவடியில் வெடி பொருட்கள் நிரம்பிய காரை தற்கொலைப் படை பயங்கரவாதி வெடிக்கச் செய்தான். இதில் 2 போலீசார் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் பாணியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்