சென்னை:

த்தாலியில்,கொரோனா தொற்று பரவலுக்கு, அங்குள்ள மருத்துவமனைகளே பெரும் காரணமாக இருந்த நிலையில், நமது நாட்டில் உள்ள  மருத்துவமனைகள், கொரோனா தொற்றுக்களை சமாளிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது…

மக்கள் நெருக்கம் மிகுந்த நமது நாட்டில், கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளையும், எச்சரிக்கைகளையும் விடுத்து வரும் நிலையில், அதை  பெரும்பாலோர் மதிக்க தவறி வருவது கண்கூடாக  பார்த்து வருகிறோம்..

அரசின் எச்சரிக்கையை மீறி மக்கள் கூடுவதாலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பலர், அரசின் அறிவுறுத்தலை  மீறி, தனிமைப்படுத்துதலை தவிர்த்து, ஜாலியாக சுற்றி வருவதும், மற்ற மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற தான்தோன்றித்தனமாக நிகழ்வுகளாலும், அரசின் எச்சரிக்கையை மதிக்காமல் செயல்படும் பலரால் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உறுதிப்படுத்தி உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்காக  சென்னை உள்பட அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா வார்டு என தனி வார்டு ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

ஆனால், இந்த வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வரும் கொரோனா நோயாளிகளால், அருகிலுள்ள வார்டுகளில் மற்ற நோயாளிகளுக்கும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியுமா, அதற்காக ஏதாவது விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதா என்பது என்பது மில்லியன் டாலர் கேள்வியை எழுப்பி உள்ளது…

சீனாவில், ஊருக்கு வெளியே பிரமாண்டமான சிறப்பு மருத்துவமனையை கட்டி, அங்கு கொரோனா நோயாளிகளை அடைத்து வைத்து சிகிச்சை அளித்தது அந்நாட்டு அரசு… இதனால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது..

ஆனால்,  சரியான முறையில் நோய்தடுப்பு முறைகளை செய்யாத இத்தாலியோ.. இன்று கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி சின்னாப்பின்னமாகி…எங்களை காப்பாற்றுவார் யாரும் இல்லையா என்று மரணம் ஓலமிடுகிறது…

கடந்த சில நாட்களிலேயே சீனாவை மிஞ்சிய உயிர்களை பலிகொடுத்துள்ள இத்தாலி அரசோ, சரியான முறையில் நோய் தொற்றை தடுக்காமல், ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையிலேயே கொரோனா  நோயாளிகளை அனுமதித்து  சிகிச்சை அளிக்க, அதனால்  நோய் தொற்று, மருத்துவமனை முழுவதும் பரவி, ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டு, இம்முயுனிட்டி பவர் இல்லாத ஏராளமான நோயாளிகள் கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளா முடியாமல் கொத்து கொத்தாக மரணத்தை தழுவி வருகின்றனர்…

இதை பார்க்கும்போது, நமது தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பு வார்டுகள், மருத்துவமனைகள்  அச்சத்தையே ஏற்படுத்துகின்றன.

ஒரே மருத்துவ வளாகத்தில், ஒரே ஒரு வார்டு மட்டும் கொரோனாவுக்காக ஒதுக்குவதால் எந்தவித பயனும் இல்லை.. இதனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியே… 

இத்தாலி மருத்துவமனைகள் கொரோனா நோய் பரவலின் ஹாட்ஸ்பாட்களாக மாறிய உயிர்களை பலிகொண்ட நிலையில், நமது  நாட்டிள் உள்ள  மருத்துவமனைகளும், மாநில மற்றும் மத்தியஅரசுகளும் என்ன செய்யப்போகின்றன…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்கும் வகையில், சிறப்பு மருத்துவமனை  கட்ட மத்திய மாநில அரசுகள் இதுவரை எந்தவித திட்டமிடலும் செய்யவில்லை… இதுபோன்ற சூழலில்தான் நாம் கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொண்டு வருகிறோம்…

நமது தமிழகம் உள்ள அண்டை மாநிலங்களில் உள்ள கொரோனா வார்டுகள்… போதிய வசதியின்றி உள்ள நிலையில், இவைகள் மூலம்  கொரோனா தொற்று தடுக்கப்படுமா, அல்லது  இத்தாலி மருத்துவமனைகளைப் போல ஹாட் ஸ்பாட்டாக மாறுமா? என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிய வரும்…

நமது மத்திய மாநில அரசுகள் என்ன செய்யப்போகிறது…

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டுவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில்  இருந்து நம்மை  பாதுகாப்போம்…