ஜார்கண்ட்: குழந்தைகளை பல கோடி ரூபாய்க்கு விற்ற 2 கன்னியாஸ்திரிகள் கைது

ராஞ்சி:

குழந்தைகளை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் குழந்தை கடத்தல் வழக்கில் தனியார் தொண்டு நிறுவன அமைப்பை சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்குள்ள குழந்தைகளை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதாக கன்னியாஸ்திரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.