காஷ்மீர்: பயங்கரவாத ஒழிப்பு பணியில் தேசிய பாதுகாப்பு படை

டில்லி:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு ஆப்ரேஷன்களுக்கு தேசிய பாதுகாப்பு படை களமிறங்கும் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. காஷ்மீர் போலீசுக்கு தேசிய பாதுகாப்பு படையினர் குர்கான் அருகே சிறப்பு பயிற்சியை அளித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டர்கள் ஸ்ரீநகர் அருகே எல்லைப் பாதுகாப்பு படை முகாமில் பயிற்சி மேற்கொள்கிறார்கள். விமான கடத்தல் தடுப்பில் சிறப்பு பயிற்சி பெற்ற தேசிய பாதுகாப்பு படையினர் விமான நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த படையை பயன்படுத்துவதால் பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு குறைய வாய்ப்பு உள்ளது.

3டி ரேடாருடன் சுவரை தாண்டிச் சென்று துல்லியமாக தாக்கும் ஆயுதங்களை கொண்டுள்ள இந்த படை பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு உதவியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.