வேகத்தடையில் வாகனம் தடுமாற்றம்…..துப்பாக்கி குண்டு பாய்ந்து ராணுவ அதிகாரி பலி

ஸ்ரீநகர்:

ஜம்மு – காஷ்மீர் குந்த்ரூ ராணுவ தலமையகத்தில் கலோனியலாக இருப்பவர் மகாதிக். இவர் இன்று தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வாகனம் வேகத்தடையில் ஏறி இறங்கியது. அவரது கையில் இருந்த துப்பாக்கி தடுமாறி விழுந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி திடீரென வெடித்தது. இதில் மகாதிக் உடலில் குண்டு பாய்ந்தது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.