காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் பலி

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாதமாலோ பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் ரோந்து வாகனத்தை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயம் வீரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

தொடர்ந்து அந்த பகுதியில் தீவிராதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. எனினும் தீவரவாதிகள் அங்கிருந்து தப்பி தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க பாதுகாப்பு படை அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இது வரை பொறுப்பு ஏற்கவில்லை.