காஷ்மீர்: பாதுகாப்பு படை வாகனம் மீது குண்டு வீச்சு

ஸ்ரீநகர்:

காஷ்மீர் ஸ்ரீநகரில் பந்தா சவுக் பகுதி வழியாக துணை ராணுவப் படையினர் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் பாதுகாப்பு படை வாகனங்கள் மீது கையெறி குண்டுகளை வீசினர்.

இதையடுத்து அந்த பகுதியில் கூடுதலாக படைகள் குவிக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க ராணுவம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.