Random image

கேரளா: கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மீது பாலியல் புகார்….விசாரணைக்கு உத்தரவு

திருவனந்தபுரம்:

கேரளா கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரளாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. பி.கே. சசி மீது பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். பாலக்காட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த பெண் தலைவர் ஒருவர் கட்சி மேலிடத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மாநில தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கட்சியின் அரசியல் விவகாரக்குழு உறுப்பினர் பிருந்தாகரத்துக்கு இந்த புகார் அனுப்பப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கும் இமெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சீத்தாராம் யெச்சூரி டில்லியில் நிருபர்களிடம் கூறுகையில் ‘‘ஆமாம், எனக்கு புகார் வந்து இருக்கிறது. அதை கேரள மாநில கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளேன். அவர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்’’ என்றார்.

இது குறித்து பி.கே. சசி கூறுகையில்‘‘, இது அரசியல் ரீதியிலான சதி. விசாரணை நடத்தினால் உண்மையான கம்யூனிஸ்டாக அதை சந்திப்பேன்’’என்றார். கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறுகையில்,‘‘ பி.கே. சசி மீதான புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார்.