உலக வங்கியில் அதிகம் கடன் வாங்கிய நாடுகளில் மூன்றாம் நாடு இந்தியா

டில்லி

டந்த நான்கு ஆண்டுகளில் உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

உலக வங்கியில் இருந்து பல நாடுகள் பல திட்டங்களை நிறைவேற்ற கடன் வாங்கி வருகின்றன. இந்த வங்கி பருவ மாறுதல், சாலைப் பணிகள், மேம்பாட்டுப் பணிகள்,, சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட பல அரசு நல திட்டங்களுக்கு கடன் உதவி வழங்கு கிறது. இவ்வகையில் இந்தியா தான் வாங்கிய கடனை சரிவர திருப்பி செலுத்துவதால் உலக வங்கி இந்தியாவுக்கு பல நல திட்டங்களை நிறைவேற்ற தொடர்ந்து கடன் உதவி அளித்து வருகிறது.

உலக வங்கி சமீபத்தில் அளித்த தகவலில், “பல நாடுகளின் கூட்டமைப்புக்கும் தனி நாடுகளுக்கும் உலக வங்கி கடன் அளித்து வருகிறது. அவ்வகையில் இந்தியாவுக்கு உலக வங்கி பல சலுகைகள் அளித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் உலக வங்கியில் அதிக கடன் வாங்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது

ஒரு நாட்டின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப உலக வங்கிகள் கடன் அளித்து வருகிறது. அவ்வகையில் இந்தியா முன்பிருந்ததை விட தற்போது அதிக அளவில் கடன் வாங்கி உள்ளது.   இதற்கு இந்தியாவின் உற்பத்தி திறன அதிகரித்தது மட்டுமின்றி மற்றொரு காரணமும் உண்டு

உற்பத்தித் திறனுக்கு ஏற்ப இல்லாமல் முன்பு குறைந்த அளவில் கடன் வாங்கி வந்த இந்தியா தற்போது உற்பத்தி திறனுக்கு ஏற்ப கடன் வாங்கி வருகிறது. ஆகவே தற்போதுள்ள நிலையில் இந்தியா கடந்த 4 ஆண்டுகளை கணக்கிட்டால் அதிக கடன் வாங்கிய நாடுகளில் மூன்றாம் இடத்தில் உள்ளது.” என தெரிவித்துள்ளது

 

THANX : THE PRINT

 

கார்ட்டூன் கேலரி