லண்டன்: ராகுல்காந்தி நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் ரகளை

லண்டன்:

லண்டனில் ராகுல்காந்தி நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இடையூறு ஏற்படுத்தியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டனில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் பேசினார். அவரது பேச்சை கேட்க ஏராளமானோர் கூடியிருந்தனர். நிகழ்ச்சி தொடங்கி இருந்த சமயத்தில் பார்வையாளர்கள் வரிசையில் இருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் 3 பேர் ‘‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’’ என கோஷமிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘‘காங்கிரஸ் ஜிந்தாபாத்’’ என்று சிலர் கோஷமிட்டனர்.தகவலறிந்து வந்த போலீசார் காலிஸ்தான் ஆதரவாளரகளை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் நடந்தபோது ராகுல்காந்தி அங்கு இல்லை. அதன் பின்னர் தான் அங்கு வந்து அவர் பேசினார்.