மத்திய பிரதேசம்: பிரபல ஆன்மீக தலைவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…பக்தர்கள் அதிர்ச்சி

இந்தூர்:

மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சமூக பணிகளில் ஈடுபட்டுவந்த பிரபல ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜ் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். உதய் சிங் தேஷ்முக் என்ற இயற்பெயரை கொண்ட இவருக்கு இந்தூரில் மிகப்பெரிய ஆசிரமம் உள்ளது.

 

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் போன்ற முக்கிய முக்கிய பிரமுகர்கள் இவரது சீடர்களாக உள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆன்மிக குருவாக இருந்த இவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். உயிருக்கு போராடிய அவர் இந்தூர் பாம்பே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

ஊழலுக்கு எதிராக சமூக சேவகர் அன்னா ஹசாரே போராட்டத்தின் போது சமாதானத்தை ஏற்படுத்த மஹராஜ் முயற்சி மேற்கொண்டார். இவருக்கு மத்தியப்பிரதேச மாநில பாஜக அரசு கடந்த ஏப்ரலில் இணை அமைச்சர் பதவி அளிக்க முன்வந்தது. ஆனால் இதை அவர் ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்த க்கது. இவரது மரணத்தை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள், பக்தர்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இவர் பற்றிய சில தகவல்கள்…

எப்போதும் இவர் மெர்சிடீஸ் காரில் தான் பயணம் செய்வார்.

ரோலக்ஸ் வாட்ச் இல்லாமல் இவரை பார்ப்பது அரிது.

1968ம் ஆண்டில் பிறந்த இவர் ஆன்மீகத்தில் ஈடுபவதற்கு முன்பு ஆடை விளம்பர மாடலாக இருந்தார்.

சுஜால்பூரில் உள்ள நில சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர்.

அன்னா ஹசாரே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர்.

குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ள மஹாராஜூக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா படேல், சரத்பவார், லதா மங்கேஸ்கர், உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே, ஆஷா போஸ்லே போன்ற விஐபி.க்கள் இவரது ஆசிரமத்துக்கு வருகை புரிந்துள்ளனர்.

2016ம் ஆண்டு புனேயில் நடந்த கார் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பினார்.

அப்போது இவர் காயமடைந்தபோது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத், சிவ்ராஜ் சிங் சவுகான், ஆன ந்திபேன் படேல் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.