Random image

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு பீதியை ஏற்படுத்தும் பாஜக….சிவசேனா

மும்பை:

மகாராஷ்டிராவில் பெண்கள் மத்தியில் பாஜக பீதியை ஏற்படுத்துகிறது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கடத்தி வந்து காதலன் மற்றும் அவரது பெற்றோரிடம் ஒப்படைப்பேன் என்று மாகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ ராம் கதான் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது பேச்சை சிவசேனா கண்டித்துள்ளது. இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமன்னாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,‘‘இஸ்லாமிய பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக முத்தலாக் முறையில் மாற்றம் கொண்டு வர பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். ஆனால் மகாராஷ்டிராவில் பெண்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் அவகையில் பாஜக எம்எல்ஏ பேசியுள்ளார். முதல்வருக்கு நெருக்கமான ஒரு எம்எல்ஏ அருவருக்கத் தக்க வகையில் பேசி தனது அகந்தையை வெளிப்படுத்தியுள்ளார். மகாராஷ்டிராவில் தலைதூக்கியுள்ள இந்த நிகழ்வு எந்தவிதமான கலாச்சாரம் என்பது புரியவில்லை.

இது போன்ற நபர்கள் சத்ரபதி சிவானி பெயரை கூறிக் கொண்டு மாநிலத்தை ஆள உரிமையில்லை. இதன் மூலம் இளைஞர்களுக்கு பாஜக என்ன சொல்ல முயற்சிக்கிறது என்பது தெரியவில்லை. பாஜக.வின் இந்துத்வா கொள்கை இது தானா?. இந்து கடவுளான கிருஷ்ணர் பெண்களை பாதுகாத்தார். ஆனால், பாஜக எம்எல்ஏ பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கிருஷ்ணர் பிறந்த நாள் அன்று தெரிவித்துள்ளார். இதை கேட்டு பாஜக அமைதியாக இருக்கிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You may have missed