ஒரு தலை காதல்….சிறுவனை பிளேடால் கிழித்த பெண் கைது

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் காதலை ஏற்க மறுத்த சிறுவனை பிளேடால் கிழித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த பெண், சிறுவனை தனது வீட்டுக்கு அழைத்து காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதை ஏற்க சிறுவன் மறுத்துவிட்டான். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் சிறுவனின் முகத்தை பிளேடால் கிழித்தார். இதில் காயமடைந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசார் முன்னிலையில் அந்த பெண் தனது கையை கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.