பா.ஜ.க. சின்னத்தை வரைந்தால் பரீட்சையில் 4 மதிப்பெண்..
இம்பால்
மணிப்பூர் மாநிலத்தில் 12 ஆம் வகுப்புத் தேர்வில் பாஜகவின் சின்னத்தை வரையச் சொல்லிக் கேட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது/
அனைத்து தளங்களிலும் மத்திய பா.ஜ.க.அரசு, தனது கொள்கைகளையும் தத்துவங்களையும் திணித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்-
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து வந்துள்ள ஒரு செய்தி.
அந்த மாநில 12 ஆம் வகுப்புத் தேர்வை மணிப்பூர் மேல்நிலை கல்வி குழு நடத்தி வருகிறது.
அண்மையில் அங்கு அரசியல் அறிவியல் பரீட்சை நடந்தது.
அதில் கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கேள்வி இது:
‘பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னத்தை வரைக’..
தாமரையைச் சரியாக வரைந்தால் 4 மதிப்பெண்.
’நேருவின் மோசமான நான்கு குணங்களை எழுதுக’’
என்பது வினாத்தாளின் இன்னொரு கேள்வி.
இந்த வினாத்தாள் அங்குள்ள சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ-
இம்பாலில் உள்ள மேல்நிலை கல்வி குழு அலுவலகத்தை எதிர்க்கட்சிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
’’இது போன்ற கேள்விகளைக் கேட்பதன் மூலம் மாணவர்களிடையே குறிப்பிட்ட அரசியல் கருத்துக்களைப் புகுத்த முயற்சி நடக்கிறது’’ என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆனால் தேர்வை நடத்திய குழுவோ ‘’ பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ;இந்தியாவில் அரசியல் செயல்பாடு’ என்ற அத்தியாயத்தில் இருந்து தான் கேள்வி கேட்கப்பட்டுள்ளது’’ என்று சமாளிக்கிறது.