இறந்த நடிகர்கள் நினைவாக நடிகை உதவி.. 150 குடும்பத்துக்கு மளிகை பொருட்கள்..

--

கொரோனா ஊரடங்கில் ஏழை எளியவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என பலருக்கு உதவி வருகிறார் பிரணிதா. இவர் சமீபத்தில் இறந்த நடிகர்கள் சிரஞ்சீவி சார்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புத் நினைவாக பெங்களுருவில் இன்று 150 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினார்.


இதுபற்றி பிரணிதா கூறும்போது.’சிரு சார்ஜா, சுஷாந்த் இருவரும் கடவுளுக்கு நெருக்கமாக சென்றுவிட்டார்கள். அவர்களின் நினைவாக இன்று எனது அறக்கட்டளை சார்பில் 150 குடும்பங்களுக்கு மளிகைபொருட்கள் வழங்கப்பட்டன. வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்கள். விலைமாதர்கள் போன்றவர் களுக்கு உதவி வழங்கப்பட்டது’ என்றார்.
நடிகை பிரணிதா சூர்யாவுடன் மாஸ், கார்த்தியுடன் சகுனி உள்ளிட்ட பலபடங்களில் நடித்திருக்கிறார்.