ஸ்ரீ ராஜீவ்காந்தி ஒரு அற்புதமான தந்தை… நினைவுகூர்ந்த ராகுல் காந்தி…

--

டெல்லி:

றைந்த ராஜீவ்காந்தியின் 29வது நினைவுநாளையொட்டி, அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி, தனது நினைவலைகளை டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 29வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளதால், டெல்லியில் உள்ள அவரது சமாதி அமைந்துள்ள வீர் பூமிக்கு அஞ்சலி செலுத்த யாரும் செல்ல முடியாத  நிலையில், ராகுல்காந்தி, டிவிட்டர் மூலம் தனது தந்தையின் நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

டிவிட்டில், 1991 ம் ஆண்டு இதே நாளில், தனது தந்தை தியாகியானார்.  எனது அன்புத் தந்தை ஸ்ரீ ராஜீவ் காந்தி ஒரு அற்புதமான தந்தை; மென்மையான, கனிவான, இரக்கமுள்ளவர், நான் அவரை இழந்துள்ளேன்…  ஆனால் அவர் எப்போதும் என் இதயத்திலும், அவரைப் பற்றிய அற்புதமான நினைவுகளிலும் உயிருடன் இருப்பார்.

இவ்வாறு உள்ளக்குமுறலுடன் அவர் பதிவிட்டு உள்ளார்.