மோடியின் ஆட்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும் மந்திர சக்தி! ராகுல் டிவிட்

டில்லி:

மோடியின் ஆட்சியில், இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அமானுஷ்ய மந்திர சக்தி இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி டிவிட் செய்துள்ளார்.

நாடு முழுவதும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் முடிவடைந்து உள்ளன. நேற்று கடைசி கட்டமாக ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று இரவு ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப் பட்டிருந்த பெட்டி ஒன்று சாலையோரம் கிடந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பலத்த பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்படும் வாக்குப்பதிவு இயந்திரம் எப்படி சாலைக்கு வந்தது என்பது மர்மமாக உள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி அதற்கு ஆதாரமான படங்களுடன் டிவிட் செய்துள்ளார்.

அதில், காங்கிரஸ் கட்சி தொழிலாளர்கள், விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது.

மத்திய பிரதேசத்தில, வாக்கு பதிவு இயந்திரங்கள் வித்தியாசமாக நடந்து கொண்டது.

சிலர் வாக்குப்பதிவு இயந்திரங்களுடனான பள்ளி வேனை திருடி, அழித்தனர். குடிபோதையில் அவர்கள் ஓட்டலில் சிக்கினர்.

மோடியின் இந்தியாவில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மர்மமான சக்திகளைக் கொண்டுள்ளன.

கவனமுடன் இரு!

என்று பதிவிட்டு உள்ளார்.

எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பத்தகுந்தவை அல்ல என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக அரசும், தேர்தல் ஆணையமும் ஈவிஎம் இயந்திரங்களையே வாக்குப்பதிவுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது.