ஆந்திர தலைநகர் அமராவதி இடம் பெறாத புதிய இந்திய வரைபடம்

டில்லி

மீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய இந்திய வரைபடத்தில் ஆந்திர தலைநகர் அமராவதி இடம் பெறாதது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேச மாநிலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்போது ஐதராபாத் நகரம் கடந்த 2014 முதல் 10 வருடங்களுக்கு இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும் எனச் சட்டம் இயற்றப்பட்டது.  ஆந்திர மாநிலத் தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டு அந்த நகரக் கட்டமைப்புக்காகப் பிரதமர் மோடி தலைமையில் விழா ஒன்று நடைபெற்றது.

தற்போது காஷ்மீர் மாநிலம் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.  அதையொட்டி இந்திய அரசு சார்பில் ஒரு புதிய வரைபடம் வெளியிடப்பட்டது.  இந்த புதிய வரைபடத்தில் அனைத்து மாநில தலை நகரங்களும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆந்திர மாநில தலைநகர் அமராவதி அந்த வரைபடத்தில் காணப்படவில்லை.

மாறாக அந்த வரைபடத்தில் ஐதராபாத் நகரை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் நிர்வாக தலைநகராகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆந்திர மாநில அதிகாரிகள் மற்றும் அரசு ஆகிய யாரும் ஐதராபாத் நகரில் இருந்து இயங்காத நிலையில் இவ்வாறு வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இரு மாநில மக்களிடையே கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

You may have missed