நைஜீரியாவில் கொள்ளை கும்பல் சுட்டு 45 பேர் பலி

அபுஜா:

நைஜீரியாவில் கொள்ளைக் கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 45 பேர் பலியாயினர்.

வடக்கு நைஜீரியாவில் கடூனா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கொள்ளைர்கள் இன்று புகுந்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் வகையில் அவர்கள் திடீரென சராமரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் பொதுமக்கள் 45 பேர் குண்டு பாய்ந்து பலியாயினர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்களும் நடந்துள்ளது.