கோடை சூட்டை தணிக்க நாய் கறி சாப்பிடும் வட கொரியா மக்கள்

பியோங்யங்:

வடகொரியாவில் கோடை காலம் நாய்களுக்கு போதாத காலமாகிவிட்டது. முன்பெல்லாம் கோடை சூட்டை தணிக்க தினமும் 2 முறை பீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். ஆனால், தற்போது நாய் சூப் குடித்து சூட்டை தணிக்க தொடங்கிவிட்டனர்.

வட கொரியா மற்றும் தென் கொரியாவில் சத்துள்ள உணவாக நாய் கறி நீண்ட காலமாக கருதப்படுகிறது. பாரம்பரியமாகவே நாய் கறி சாப்பிடும் பழக்கம் கொரிய மக்களிடையே இருந்து வருகிறது. ஆனால், தற்போது கோடை காலத்தில் குறிப்பிட்ட தினங்களை நிர்ணயம் செய்து நாய் கறி சாப்பிடுகின்றனர். குறிப்பபக இந்த ஆண்டு ஜூலை 17, 27 மற்றும் ஆகஸ்ட் 16ம் தேதிகளில் நாய் கறி சாப்பிடும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இதற்கான தேவை அதிகரித்துள்ளது. கிழக்கு ஆசியாவில் தட்பவெட்ப நிலையில் அனல் அளவு அதிகரித்துள்ளது. இதனால் வட கொரியாவில் இதன் தாக்கம் அதிகளவில், அதாவது 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உள்ளது. இதன் காரணமாக வட கொரியாவின் பல நகரங்களில் அதிகளவில் நாய் கறி சாப்பிடப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே உள்பட பலராலும் செல்லப் பிராணிகளாக நாய்கள் வளர்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் 20 லட்சம் நாய்கள் கொல்லப்பட்டு சாப்பிடப்படுகிறது. அதோடு மூத்த கொரியாவின் மூத்த குடிமக்கள் மத்தியில் ஆண்மை அதிகரிப்புக்கு நாய் கறி உகந்தது என்று நம்பப்படுகிறது. ஆனால் இளைஞர்கள் மத்தியில் இந்த நடைமுறையை தடை செய்ய வேண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.