ஒடிசா: வீட்டுக்குள் பாம்பு பண்ணை இருந்தது தெரியாமல் வாழ்ந்து வந்த குடும்பம்…அதிர்ச்சி தகவல்

புவனேஸ்வர்:

ஒடிசாவில் உள்ள ஒரு வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒடிசா மாநிலம் பதராக் மாவட்டம் பைகாசாகி கிராமத்தை சேர்ந்தவர் பிஜே புயான். இவரது வீட்டில் அவரது மகள் விளையாடும் அறையில் இருந்து பாம்பு ஒன்று வெளியேறுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பாம்பை பிடித்துச் செல்ல விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக அவரது வீட்டிற்கு அந்த அமைப்பை சேர்ந்த மீட்புக் குழுவினர் விரைந்து வந்தனர். பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர். வீட்டின் ஒரு அறையில் நாகப் பாம்பு குட்டிகள் மொத்தமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 110க்கும் மேற்பட்ட நாகப் பாம்பு குட்டிகள் கொத்து கொத்தாக ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கிடந்தன. 2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாம்புகளோடு 20 முட்டைகளும் இருந்தன.

இதனைக் கண்டு மீட்புக் குழுவினரும், பிஜே புயான் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பாம்புகளை மீட்டுச் சென்றனர்.