ஒடிசாவில் பசு பாதுகாவலர்கள் வீண் போராட்டம்…..ஹவுரா ரெயில் 4 மணி நேரம் நிறுத்தம்
புவனேஸ்வர்:
பசுக்களை கடத்திச் செல்வதாகக் கூறி 4 மணி நேரம் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலை பசு பாதுகாவலர்ள் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலோசோர் ரெயில் நிலையத்துக்கு நேற்று இரவு கொல்கத்தா நோக்கி பாண்டிச்சேரி-&ஹவுரா ரெயில் வந்தடைந்தது. அதில் 17 பசுக்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. இதையறிந்த கோ சுராக்சியா சமிதி அமைப்பைச் சேர்ந்தவர்வர் அங்கு திரண்டு ரெயிலை மறித்தனர். உரிய ஆவணங்களுடன் பசுக்கள் கொண்டு செல்லப்படுவதாக கூறிய பின்னரும் பசு பாதுகாவலர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு 8.12 மணி முதல் இன்று அதிகாலை 12.35 வரை போராட்டம் நீடித்தது. இதனால் ரெயில் அங்கே நின்றது. பாலாசோர் ரெயில் நிலைய மேலாளரும், போலீசாரும் உரிய ஆவணங்களைக் காட்டி விளக்கினர்.
இதன் பின்னரே பசுப் பாதுகாவலர்கள் பின்னர் போராட்டத்தை கைவிட்டு ரெயில் செல்ல அனுமதித்தனர். ‘‘முன்பே ஆவணங்களை கேட்டிருந்தால் இந்த வீண் போராட்டம் தேவையில்லை. தேவையில்லாமல் ரெயில் தாமதம் ஆனது தான் மிச்சம். அதிகாரிகள் கூறிய விபரங்களை அவர்கள் காது கொடுத்து கேட்கவில்லை’’ என்று போலீசார் தெரிவித்தனர்.