பிராடிஸ்லவா

ரோப்பிய ஒன்றிய நாடான ஸ்லோவாக்கியா நாட்டு மக்களில் பாதிப் பேருக்கு ஒரே நாளில் கொரோனா சோதனை நடந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெற்றுள்ள ஸ்லோவாக்கியா நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இங்கு அதிக அளவில் ஊரடங்கு அறிவிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி கொரோனா பாதிப்பு உள்ளோரைக் கண்டறிந்து அவர்களை மட்டும் தனிமைப் படுத்த முடிவு செய்யப்பட்டது.

 நாடெங்கும் உள்ள அனைத்து மக்களுக்கும் இரு நாள் கொரோனா பரிசோதனை செய்யத் திட்டம் தீட்டப்பட்டது.

அதன்படி முதல் நாள் அன்று ஒரே நாளில் நாட்டில் பாதிப்பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் மக்கள் தொகை சுமார் 55 லட்சம் ஆகும்.

அன்று ஒரே நாளில், 25.8 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

சோதனையில் 1% அதாவது 25,850 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.