பாரிஸ்: மர்ம நபர் கத்தியால் குத்தி 2 பேர் பலி….ஐஎஸ்ஐஎஸ் சதியா?

பாரிஸ்

பாரிஸ் நகரில் அரேபிய மொழியில் சத்தமிட்ட மர்ம நபர் ஒருவர் மக்கள் மீது கத்தியால் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்குள் பதுங்கிவிட்டு சிறிது நேரம் கழித்து வெளியில் வந்த அந்த நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதைதொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் அனைவரையும் வெளியேற்றினர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது. இதற்கான ஆதாரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இன்று காலை தான் அல் பாக்தாதி ஜிகாத்துக்கு அழைப்பு விடுதத்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.