சண்டிகர்,

ஞ்சாப் மாநிலத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ளதால் 10 ஆண்டுகளுக்கு மீண்டு  ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்.

117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப்பில் ஆளும் சிரோன்மணி அகாலிதளம்-பாஜ கூட்டணி  ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.  ஆனால், ஏற்கனவே எக்சிட் போல் கருத்துகணிப்பு  காங்கிரஸ் வெற்றிபெறும் என்று அறிவித்திருந்தது.

அதை நிரூபிப்பதுபோல் தற்போது பஞ்சாபில் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது காங்கிரஸ். இரண்டாவது இடத்தை ஆத்ஆத்மி பிடிக்கிறது. பா.ஜ.க., அகாலிதளம் கூட்டணி படுதோல்வியை சந்தித்து வருகிறது.

காங்கிரஸ் 73 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதியாகறிது. ஆம்ஆத்மி 24 தொதிகளிலும், பாஜக கூட்டணி 18 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது.

இதன் காரணமாக பஞ்சாபில் 10 ஆண்டுகளுக்கு மீண்டும் அரியணை ஏறுகிறது காங்கிரஸ். முதல்வராக அம்ரீந்தர்சிங் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.