ராஜஸ்தான்: சாலை விபத்தில் 3 பேர் பலி…..உதவி செய்யாமல் சுற்றி நின்று செல்பி, வீடியோ எடுத்த கொடுமை

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் சோட்டான் பகுதியில் பள்ளி பேருந்து மோதியதில் மோட்டார் சை க்களில் சென்ற 3 பேர் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில மிதந்த அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிந்தனர். அப்போது அங்கிருந்து சிலர் காயமடைந்த 3 பேரையும் வீடியோ மூலமும், செல்பி மூலம் படம் பிடித்தனர். ஆனால், அவர்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த பரமானந்தா என்பவர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ச ந்திர பிரகாஷ் என்பவர் பார்மர் மருத்துவமனையில் இருந்து ஜோத்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஜெம்ரா ராம் என்பவரும் பார்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் தீவிர காயம் காரணமாக இறந்தார். நண்பர்களான இந்த 3 பேருக்கும் 25 முதல் 30 வயதுடையவர்கள்.

உரிய நேரத்தில் உதவி இருந்தால் குறைந்தபட்சம் 2 பேரது உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்று சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தை ஒருவர் 1.42 நிமிடங்கள் வரை வீடியோ எடுத்துள்ளார். சுமார் அரை மணி நேரம் வரை அவர்கள் உதவியின்றி தவித்துள்ளனர்.

அந்த நேரத்தில் அவர்களுக்கு உதவியிருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சுற்றி இருந்தவர்கள் வீடியோ எடுத்து பகிர்வதிலும், செல்பி எடுத்துக் கொள்வதிலும் தான் ஆர்வமாக இருந்துள்ளனர். செல்வி எடுத்த நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.