ஆர்.கே.நகரில் ரூ. 2 லட்சம் பறிமுதல்

சென்னை:

ஆர்.கே.நகரில் வாகன சோதனையின் போது ரூ 2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு போலீசார், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது ஒரு காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 2 லட்சம் ரொக்கம் பிடிபட்டது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.