ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் வழங்கவில்லை…டிடிவி தினகரன்

சென்னை:

‘‘ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு ரூ.20 டோக்கன் வழங்கப்படவில்லை’’ என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனை இன்று அவரது வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் தினகரனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு அதிமுகவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும். ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் எதுவும் வழங்கப்படவில்லை.

ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமி அணி தான். உண்மையான தொண்டர்கள் என்பக்கம் உள்ளனர். ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர்தான் ஓ.பன்னீர்செல்வம்’’ என்றார்.