டெல்லி: ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ பட்டம் பெற்று தேர்வில் தோல்வியடைந்த 17 பேர் மனு நிராகரிக்கப்பட்டு உள்ளன.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் தொழில் புரிய  தேர்வு ஒன்றை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். FMGE எனப்படும் அந்த தேர்வில் ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ பட்டம் பெற்ற 17 பேர்  தோல்வியடைந்தனர்.

இந்தி மொழியில் லோகோக்களுடன் வினாக்கள் இடம் பெற்றதாக 17 பேரும் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது நிபுணர் குழுவால் வினாத்தாள் ஆய்வு செய்யப்பட்டதாக மருத்துவ ஆணையம், தேசிய தேர்வுகள் வாரியம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.

இதையடுத்து, முழுமையாக தயார்படுத்திக்கொண்டு அடுத்த தேர்வை எதிர்கொள்ள மனுதாரர்களுக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கி, மனுக்களை தள்ளுபடி செய்தது.