தமிழிலும் ‘ஆயி’ என்றால் ‘அன்னை’ என்றுதான் பொருள்…

நெட்டிசன்:
மணி மணிவண்ணன் முகநூல் பதிவு…

மிழிலும் ஆயி என்றால் அன்னை என்றுதான் பொருள். “யாயும் ஞாயும் எம்முறைக் கேளிர்?” ( உன் தாயும் என் தாயும் எந்த வழியில் உறவினர்கள்?) – சங்கப்பாடல்.

மாரியாயி, மாரியாத்தா = மாரியம்மன்.

அப்பாயி = அப்பாவி அம்மா
அம்மாயி = அம்மாவின் அம்மா.

அன்னை என்ற பொருள் தரும் ஆயி என்ற சொல் திராவிட மொழிக் குடும்பத்துச் சொல்.

மராத்தியில் இந்தச் சொல் கன்னடத்திலிருந்து வந்திருக்கலாம். அல்லது, இன்று மராத்தி பேசும் மக்கள் பழங்காலத்தில் ஏதோ ஒரு திராவிட மொழி பேசியவர்களாக இருந்திருக்கலாம்.

Marathi may have “aai” as a Dravidian substrate or it is a loan word from Kannada.