தெலங்கானாவில் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம்….பாஜக அறிவிப்பு

ஐதராபாத்:

2019-ம் ஆண்டில் தெலுங்கானா தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று பாஜக அறிவித்துள்ளது.

இது குறித்து தெலுங்கானா மாநில பா.ஜ.க தலைவர் லட்சுமணன் கூறுகையில், ‘‘நாங்கள் கூட்டணி வைக்கப்போவது கிடையாது. தெலுங்கானாவில் இனி நடைபெறும் தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம்” என்றார்.

119 உறுப்பினர்கள் கொண்ட தெலுங்கானா சட்டமன்றத்தில் பாஜக.வுக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. 2019ம் ஆண்டு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலையும் தெலங்கானா சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.