சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 21 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…

சென்னை:

சென்னையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,56,369 ஆக உயர்நதுள்ளது. இதனால் மொத்த உயிரிழப்பு 2236 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று 1157 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 82,128 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 65,748 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 15,o38  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,341 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இன்று மேலும்  21 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.