சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 17 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…

சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு  உச்சமடைந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 17 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. பாதிக்கப்பட்டோ ரின் மொத்த  எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80,961 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,318 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,167 ஆக அதிகரித்துள்ளது

இந்த நிலையில் சென்னையில்  கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு முதல் இன்று காலை 10 மணி வரை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்  7 பேரும்,  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 2 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேர் உள்பட மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.