இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28701 பேர் பாதிப்பு… 500 பேர் மரணம்….

டெல்லி:

ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  28701 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மேலும்  500 பேர் மரணம் அடைந்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில்கொரோனா வைரஸ் நாளுக்கு நாள்  வேகமாக பரவி வருகிறது. தற்போது  ஊரடங்ககில்  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில்  கொரோனா பாதிப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,78,254 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தல் இதுவரை இல்லாத அளவுக்க  28,701 பேருக்கு புதிதாக  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே போல் 24 மணி நேரத்தில் 500 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,174 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 5,53,471 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,01,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை  2,54,427 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,40,325 பேர் கொரோனாவில் இருந்து  குணமடைந்துள்ளனர். தற்போதுவரை 10, 289  பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 138470 பேருக்கும், டெல்லியில் 112494 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.