டில்லி,

டந்த டிசம்பர் மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலம் தேறி இன்று பாராளுமன்ற மேலவைக்கு வருகை புரிந்தார்.

அவருக்கு லோக்சபா உறுப்பினர்கள் அனைவரும் எழுந்துநின்று கைதட்டி வரவேற்று தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ்  கடந்த ஆண்டு, தனது சிறுநீரகம் செயலிழந்து விட்டதாகவும், தற்போது டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வருவதாகவும்  ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதையடுத்து அவருக்கு சிறுநீரகம் தர பலர் முன்வந்தனர்.

அதைத்தொடர்ந்து அவருக்கு டிசம்பர் 10ந்தேதி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வு எடுத்து வந்தார். தற்போது அவரது உடல்நிலை தேறியதைத்தொடர்ந்து இன்று லோக்சபா கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அவரை லோக்சபா உறுப்பினர்கள் கைகளை தட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

64 வயதாகும் சுஷ்மா சுவராஜ் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பரபரப்பாக இயங்கக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.