கடந்த 16 மணி நேரத்தில், செங்கல்பட்டில் 147, திருவள்ளூர் 161 பேருக்கு கொரோனா தொற்று…

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில்  147 பேருக்கும்,  திருவள்ளூர் மாவட்டத்தில்  161 பேருக்கும் புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை)  ஒரே நாளில் 197 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3976-ஆக உயா்ந்திருந்தது. இந்த நிலையில், இன்று காலை 10 மணி  நிலவரப்படி  கடந்த 16 மணி நேரத்தில்   மேலும் 147 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா  தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,123 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 16 மணி நேரத்தில், புதிதாக  161 பேருக்கு கொ ரோனா நோய்த் தொற்று உறுதியாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி 170 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு  3085 ஆக உயர்ந்திருந்தது.  நோய் தொற்றுக்கு ஆளாகி இருந்த நிலையில்,  1874 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த  ஆவடி மாநகராட்சி, திருவள்ளூா், பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள், சோழவரம், வில்லிவாக்கம், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூா், திருவாலங்காடு, புழல் மற்றும் பூண்டி ஒன்றியங்கள், திருமழிசை, பொன்னேரி, மீஞ்சூா், திருநின்றவூா் பேரூராட்சிகளில் சேர்ந்து  மொத்தம்  மேலும் 161 பேருக்கு  தொற்று உறுதியகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  3246 -ஆக உயர்ந்துள்ளது.