மோடியும், யோகியும் இணைந்து கோவில்களை இடிக்கின்றனர்….வாரனாசி சாமியார் குற்றச்சாட்டு

லக்னோ:
உத்தரபிரதேசம் மாநிலம் வாரனாசியில் மோடியும், யோகியும் இணைந்து கோவில்களை இடிப்பதாக சாமியார்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் வாரனாசி பிரதமர் மோடியின் தொகுதியாகும். இங்குள்ள கோவில்களை பிரதமர் மோடியும், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இணைந்து இடிப்பதாக சாமியார்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்துக்கு வாக்களிப்பதாக நினைத்து வாக்களித்தோம். ஆனால், உண்மையிலேயே இந்துத்வாவுக்கு தான் வாக்களித்துள்ளோம் என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.