உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை: எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

எஸ்.வி.சேகர்

சென்னை:

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்கும் படி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், எஸ்.வி.சேகர் முன்ஜாமின் வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

அவருக்கு முன் ஜாமின் கிடைக்குமா அல்லது அவரை சரண்டர் அடைய உச்சநீதி மன்றம் கூறுமா  என்பது இன்று தெரிய வரும்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக அவர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், எஸ்.வி.சேகர் கடந்த ஒரு மாதமா தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை கைது செய்ய தமிழக காவல்துறையினர் தேடி வருவதாகவும், தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி வரும் நிலையில், அவர் மத்திய அமைச்சருடன் நிகர்ச்சிகளில் கலந்துகொண்டும், கோவில்களில் சுற்றிக்கொண்டு திரிகிறார்.

இந்நிலையில், அவரது முன்ஜாமின் மனு  சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இன்றைய விசாரணையில் எஸ்.வி.சேகருக்கு ஜாமின் கிடைக்குமா அல்லது, அவரை காவல்துறையினரிடம் சரண்டர் அடை உச்சநீதி மன்றம் கூறுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..