தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (-25ம் தேதி) காலை 8 மணி முதல் -27ம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர் பதற்றம் காரணமாக தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 பேருக்கு மேல் கூடி நிற்க கூடாது என்பது விதிமுறையாகும்.