தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை : வானிலை ஆய்வு மையம்

சென்னை

டுத்த மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் வரண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பெய்ட்டி புயல் குறித்து இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பாலசந்திரன், “மேற்கு வங்கக் கடலின் மத்தியில் நிலவும் பெய்ட்டி புயல் வடக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.    அந்த புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.  அதனால்  மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை காணப்படும்.  மழை பெய்ய வாய்ப்பு இல்லை.  இன்னும் மூன்று நாட்களுக்கு பிறகு வங்கக் கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.   கடந்த இரு தினங்களாக தமிழகம் மற்றும் புதுவையில் வழக்கமான அளவை விட 4% வரை வெப்பம் குறைந்து இருந்தது” என தெரிவித்துள்ளார்.