வாஷிங்டன்:  அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் டிரம்ப்  தனது சொந்த மாகாணத்திலும், வணிகம் செய்யும் மாகாணத்திலும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளார். இது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் விளிம்பின் ஜோ பைடன் இருந்துவருகிறார். அங்கு வெற்றி பெற 270 வாக்குகள் பெற வேண்டிய நிலையில்,  ஜோபைடன் 264 வாக்குகள் பெற்றுள்ளார். இன்னும் 6 வாக்குகள் மட்டுமே பெற வேண்டிய நிலை உள்ளது.  வாக்கு எண்ணிக்கையும் சில மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டிரம்ப் பெரும் வெற்றியை எதிர்நோக்கியிருந்த  பென்சில்வோனியோ, மிக்சிகன், ஜார்ஜியா மாகாணங்களிலும் டிரம்புக்கு தோல்வியே கிட்டியுள்ளது.
இந்த நிலையில், அவர் வசித்துவரும் சொந்த மாநிலமான குயின்ஸ் மாகாணத்திலும், அவர்  வணிகம் செய்துவரும்  மகாணத்திலும், டிரம்புக்கு எதிராகவே வாக்குகள் பதிவாகி உள்ளன. அவரதுசொந்த மாநிலமான  county of Queens-ல் 81 சதவிகித வாக்குகள், டிரம்பை எதிர்த்து போராட்டியிட்ட ஜோ பைடனுக்கே விழுந்துள்ளன. அதுபோல அவரது வணிகம் நடைபெறும் மாநிலத்திலும், 85 சதவிகித ஓட்டுக்கள் பைடனுக்கே கிடைத்துள்ளன.
இது அதிபர டிரம்புக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.