மும்பை

19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

பிரபாத் மவுரியா

கிரிக்கெட் விளையாட்டில் திறமை உள்ள இளைஞர்களை தேர்வு செய்து பத்தொன்பது வயதுக்குட்பட்ட வீரர்கள் அணி உருவாக்கப்படுகிறது. இந்த அணி உறுப்பினர்களை அகில இந்திய இளைஞர் தேர்வுக் குழு தேர்வு செய்து வருகிறது. இந்த அணி இங்கிலாந்து நாட்டில் வரும் ஜூலை 21 முதல் நடக்கும் தொடரில் கலந்துக் கொள்ள உள்ளது.

அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் ரசிக் சலாம் என்பவரும் ஒருவர் ஆவார். இவர் தனது பிறப்பு சான்றிதழை போலியாக தயாரித்து அளித்ததாக புகார் எழுந்தது. இதை விசாரித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அந்த சான்றிதழ் என கண்டறிந்தது.  ரசிக் சலாம் இன்னும் 2 வருடங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

ரசிக் சலாம்

அதனால் அவருக்கு பதில் பிரபாத் மவுரியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய அணியில், பிரியம் கார்க் (தலைவர்), யஷாவி ஜெய்ஷ்வால், தாகுர் திலக் வர்மா, திவ்யானந்த சக்சேனா, சாஷ்வத் ராவல், துருவ் சந்த் ஜுரே, ஷுபாங்க் ஹெக்டே, ரவி பாஷ்னோய், வித்யாதர் பாடில், சுஷாந்த் மிஸ்ரா, பிரபாத் மவுரியா, சமீர் ரிஸ்வி, பிரக்னீஷ் கன்பில்வர், கம்ரன் இக்பால், பிரிவேஷ் படேல் , கரண் லால், புர்ணான்க் தியாகி, மற்று அனுஷுல் காம்பெக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்