ன்னாவ்

த்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் நேற்று மாடு மேய்க்க சென்ற இரு தலித்  சிறுமிகள் மரணம் அடைந்து மற்றொரு சிறுமி மயக்கமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இது குறித்துப் பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  காவல்துறை தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆயினும் பெண்களுக்கு எதிரான குறிப்பாக தலித் பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் மேலும் அதிகரித்து வருகிறது.

அவ்வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் மூன்று தலித் சிறுமிகள் மாடு மேய்க்கச் சென்றுள்ளனர்.  அவர்கள் அருகில் உள்ள நிலத்தில் கால்நடை தீவனங்களை சேகரிக்கச் சென்று மாலை வெகு நேரமாகியும் திரும்பவில்லை.   அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் அந்த சிறுமிகளை ஊரெங்கும் தேடி உள்ளனர்.

அப்போது அந்த மூன்று சிறுமிகளும் வயலில் மயங்கி விழுந்திருந்தனர்.   உடனடியாக அவர்களைக் கிராமத்தினர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.  காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.    மருத்துவமனையில் இரு சிறுமிகள் மரணம் அடைந்த நிலையில் எடுத்து வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  மீதமுள்ள ஒரு சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கப்ப்ட்டு வருகிறது.   காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.