உ.பி.யில் 18 என்கவுண்ட்டர் மூலம் 25 பேர் கைது….ஒருவர் சுட்டுக் கொலை

லக்னோ:

உ.பி.யில் 48 மணி நேரத்தில் 18 இடங்களில் என்கவுண்ட்டர் நடத்தி 25 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து உ.பி. டிஜிபி டிஜிபி சிங் கூறுகையில், ‘‘48 மணி நேரத்தில் 18 இடங்களில் என்கவுண்ட்டரில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். இவன் 33 வழக்குகளில் தொடர்புடைய முசாபர் நகரை சேர்ந்த இந்த்ரபால்.

50 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட ஒரு குற்றவாளியையும் போலீசார் பிடித்துள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போது என்கவுண்ட்டர் நடக்கும். தங்களை காத்துக் கொள்ளவே போலீசார் சுட வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்’’ என்றார்.