உத்திரப்பிரதேசம்: 5ம் வகுப்பு தகுதி உடைய தபால்காரர் பணிக்கு 3,700 பிஎச்டி பட்டதாரிகள் விண்ணப்பம்

உத்திரப்பிரதேசத்தில் சுமார் 3,700 பி.எச்.டி பட்டதாரிகள் தபால்காரர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களுக்கு வேலைகள் மறுக்கப்படுவதால் ஏராளமானோர் ஐந்தாம் வகுப்பு தகுதி உடைய வேலைகளுக்கு செல்ல முன்வருவதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

Master

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் 62 தபால்காரர் பணிக்கு விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டப்பட்டன. இந்த பணிக்கு குவிந்த விண்ணப்பங்களை பார்த்த அரசு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. சாதாரணமாக ஐந்து முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை தகுதி உடைய தபால் காரர் பணிக்கு பட்டப்படிப்பு முதல் பிஎச்டி வரை படித்தவர்களே அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர்.

62 பணியிடங்களுக்கு கிடைக்கப்பட்ட 50 ஆயிரம் விண்ணப்பங்களில், 28ஆயிரம் பேர் முதுகலைப்பட்டமும், 3,700 பேர் பிஎச்டி பட்டமும் படித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தயால்துறை அதிகாரிகள் கூறுகையில், ” ஆகஸ்ட் 16ம் தேதிவரை 62 பணியிடங்களுக்கு 93,500 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அதில் பெரும்பாலானோர் பட்டதாரிகள், இந்த வேலை அன்றாடம் லட்டர்களை சைக்கிளில் கொண்டு சென்று உரியவரிடம் சேர்க்க கூடியது. இதற்கு அதிகம் படித்தவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதற்கு காரணம் வேலையின்மையே முக்கிய காரனம். இந்த தபால் காரர் வேலை நூறு சதவிகிதம் அரசு வேலை மற்றும் இதன் ஆரம்பக்கட்ட ஊதியம் 20,000 என்பதாலே அனைவரும் விண்ணப்பித்துள்ளனர் “ என்றார்.

படித்த பட்டதாரிகள் வேலையின்றி அலைந்து வரும் நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனியார் மற்றும் அரசு துறைகளில் வேலைவாய்ப்பினை அதிகரிக்க செய்ய வேண்டுமெனவும் பாதிக்க்கப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டன்ர்.

You may have missed