ப்பூர்

த்திரப் பிரதேச மாநிலத்தில் காவல்நிலையத்தில் ஒரு கைது அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக மூன்று காவலர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹப்பூர் என்னும் ஊர் டில்லியில் இருந்து சுமார் 107 கிமீ தூரத்தில் உள்ளது.  இந்த கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் டோமர் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்.   அவரது உறவினர் மனைவி கொலை செய்யப்பட்டதாகக் கைது செய்யப்பட்டு நடந்த விசாரணையில் மிகவும் தாக்கப்பட்டுள்ளார்.

அவருடன் அழைத்துச் செல்லப்பட்ட அவரது 10 வயது மகனிடம் ஒரு நொறுக்குத் தீனி பொட்டலத்தைக் கொடுத்து காவல்துறையினர் மிரட்டி காவல்நிலைய வாசலில் நிற்க உள்ளனர்.    டோமர் கடுமையாகத் தாக்கப்பட்டதால் அவர் உடல்நிலை பாதிப்பு அடைந்து அவர் மரணம்  அடைந்தார்.  இதனால் அவரது உறவினர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

டோமரின் பத்து வயது மகன், “என்னையும் எனது தந்தையையும் ஒரு வரிச் சாவடியில் இருந்து காவலர்கள் அழைத்து வந்தனர்.   எனது தந்தையைக் காவலர்கள் சரமாரியாகத்  தாக்கினார்கள்.   லத்தியால் அடிக்கப்பட்டும் ஸ்குரு டிரைவரால் குத்தப்பட்டும் அவர் சித்திரவதை செய்யப்பட்டார்.  என்னை வாயில் துப்பாக்கி வைத்து எதுவும் சொல்லக்கூடாது என அவர்கள் மிரட்டி வெளியில் நிற்க வைத்தனர்.

அதன் பிறகு என்னிடம் ஒரு காவலர் ஒரு வறுவல் பொட்டலம் கொடுத்தார்.  நான் அழுதபடி நின்றிருந்தேன்.   அன்று முழுவதும் எனது தந்தை தாக்கப்பட்டார்” எனத் தெரிவித்தார்.     அடிபட்டு மரணம் அடைந்த  ஓமரின் காயங்களை அவர் உறவினர்கள் வீடியோ படம் எடுத்து இரத்தக் கறை படிந்த அவர் உடையுடன் புகார் அளித்துள்ளனர்.

இதையொட்டி உபி மாநில காவல்துறை ஒரு துணை சூப்பிரண்ட் அதிகாரி உள்ளிட்ட மூன்று காவலர் மீது வழக்குப் பதிந்துள்ளது.   ஆனால் இதுவரை  யாரும் கைது செய்யப்படவில்லை.   அது மட்டுமின்றி குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியை விடப் பதவியில் மிகவும் குறைந்த ஒரு துணை ஆய்வாளரிடம் இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி, ”ஹப்பூரில் ஒரு விவசாயியின் மகன் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டுள்ளார்.   அவருடைய மகனை ஒரு வறுவல் பொட்டலம் அளித்துக் காவல் நிலைய வாசலில் நிற்க வைத்துள்ளனர்.    இது மிகவும் அவமானகரமான விஷயம்.   உபி மாநில பாஜக அரசால் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை.   நாள்தோறும் இத்தகைய நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.” என கண்டனம் தெரிவித்துள்ளார்.