உத்தரபிரதேசம்: போலீஸ் என்கவுண்ட்டரில் 2 பேர் பலி

லக்னோ:

உத்திரப்பிரதேசம் ராம்நகரில் 17 வழக்குகளில் தேடப்பட்டு வந்த முஷிர், இப்ராகிம் ஆகிய 2 பேர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இன்று அதிகாலை அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர்.அங்கிருந்து தப்ப முயன்ற 2 பேரும் போலீசாரை நோக்கி சுட்டனர். போலீசாரும் பதிலுக்கு சுட்டனர் இதில் 2 பேரும் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் 3 போலீசார் காயமடைந்தனர்.